ARTICLE AD BOX
கர்நாடகாவில் குகைக்குள் வாழ்ந்து வந்த ரஷ்ய பெண்மணியும் அவரது 2 குழந்தைகளும் மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: ஒரே ஒரு படம்… ரூ.50 கோடி சம்பளம் : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்!
கர்நாடகா கோகர்ணா வனப்பகுதியில் ராமதீர்த்தா மலை குகையில் 40 வயது ரஷ்ய பெண் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.ராட்சத பாம்புகள், வனவிலங்குகள் உள்ள அடர்ந்த காட்டுக்குள் அந்த பெண் வாழ்ந்து வந்துள்ளார்.
கனமழைக்காலம் என்பதால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, குகைக்கு அருகே, துணிகள், பாய்கள் காய வைக்கப்பட்டிருந்தை போலீசார் கண்டனர். மனித கால்கள், காட்டுபன்றிகளின் கால் தடம், பாம்புகள் மத்தியில் அந்த குகை இருந்தது.
உடனே குகைக்கு அருகே சென்ற போது, சிறுமி ஓடி வந்ததை பார்த்து பயந்து போன போலீசார், குகைக்கு உள்ளே நுழைந்தனர். அப்போது ஒரு பெண் தனது 6 வயது மகளுடன் இருந்தார்.
உடனே ஷாக்கான போலீசார், அந்த பெண்ணிடம் விசாரித்த போது, பல அதிர்ச்சி தகவல் வெளியாகின. தனது பெயர் நினா குட்டினா, இவர்கள் என்னுடைய மகள்கள் என கூறிய அவர், இந்த குகைக்குள் வாழ விரும்பினேன், இங்கேயே தியானம் செய்கிறேன், என் குழந்தைகளுக்கும் பாட்டு, தியானம் என கற்றுத் தருகிறேன்.
இங்குள்ள பாம்புகள், ஜந்துக்கள் எனக்கு நன்றாக அறிமுகமாகிவிட்டன. கூட்டத்தில் இருந்து விலகி, தனியாக ஆன்மிக வார்க்கை வாழ இந்த குகையை தேர்வு செய்ததாக அசால்ட்டாக கூறியுள்ளார்.
மேலும் அங்குள்ள சிலைகள் பூக்களால் அலங்கரிக்கப்பட்தையும் போலீசார் கவனித்துள்ளனர். சாப்பாட்டுக்கு, வாரம் ஒரு முறை சந்தைக்கு சென்று தேவையான பொருளை வாங்கி வருவது வாடிக்கை என்றும் அந்த பெண்மணி கூறியுள்ளார்.

பக்கத்தில் ஓடும் ஆறு தான் அவர்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் என எளிமையாக வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் பணத்திற்கு பிரச்சனை இல்லாமல் வாழ்ந்த நினாவுக்கு, அவரது உறவினர்கள் பணத்தை அனுப்பி வைத்துவிடுவார்களாம்.
இந்தியா தனக்கு பிடித்த நாடு, நாட்டை விட்டு வெளியறே விரும்பாமல், ராமதீர்த்தா குகை சாமியார்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கு புகலிடாக இருப்பதை அறிந்தே வந்ததாகவும் கூறியுள்ளார்.
இப்படியிருகக், போலீசார் அவர்களை வெளியேற சொல்லியும், மறுத்துள்ளார் ரஷ்ய பெண். பின்னர் பாதுகாப்பாக இருக்க முடியாது என கூறிய பிறகு அந்த பெண் வெளியேற சம்மதித்துள்ளார். தற்போது அவர்கள் ஒரு ஆசிரமத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே விசாரணையில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்றோரு ரஷ்ய பெண்ணின் விசா முடிந்துள்ளது. பின்னர் கோவாவில் அவர் தனது விசாரணை தற்காலிகமாக புதுப்பித்துள்ளார். இருப்பினும் அதுவும் காலாவதியாகி பல காலம் ஆகியுள்ளது.
நினா 8 வருடமாக இந்தியாவில் இருந்துள்ளார். அவரது கணவர் யார்? ஏன் அவர் தற்போது அவர்களுடன் இல்லை, விசா முடிந்தும் எப்படி வசித்து வந்தார் போன்று விசாரணையை எழுப்பி வருகின்றனர்.

சுமார் 2, 3 வாரங்களாக குகையில் வசிப்பதாக கூறியிருந்தார். இருப்பினும் எப்படி அவர் இந்த குகையை தேர்வு செய்தார் என பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.
