ARTICLE AD BOX
மன்னிப்பு கேட்க மாட்டேன்
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னட மொழி தோன்றியது” என கூறியது கர்நாடகா மாநிலத்தில் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பெங்களூரில் “தக் லைஃப்” திரைப்படத்தின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன.
அது மட்டுமல்லாது பல கன்னட அமைப்புகளும் அரசியல்வாதிகளும் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் “தக் லைஃப்” திரைப்படம் கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் கமல்ஹாசனோ மன்னிப்பு கேட்கமுடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய வலைப்பேச்சு அந்தணன், கமல்ஹாசன் விவகாரம் குறித்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார்.
ஓடிடியில் வெளியீடு?
கர்நாடகாவில் கமல்ஹாசனுக்கு பல ரசிகர்கள் இருக்கும் நிலையில் நண்பர்கள் பலரும் கமல்ஹாசனிடம், “தக் லைஃப் திரைப்படத்தை ஒரே ஒரு நாள் மட்டும் கர்நாடக பகுதியில் மட்டுமே ஒளிபரப்பாகும் வகையில் ஓடிடியில் வெளியிடலாமே?” என யோசனை கூறினார்களாம்.
ஆனால் அதற்கு கமல்ஹாசன், “அப்படி செய்தால் அது பிரிவினையைத்தான் உண்டாக்கும். அங்கிருக்கும் கன்னட அமைப்புகளுக்கு பெரிய கோபம் வரும். அது மிகப்பெரிய விளைவுகளை உண்டாக்கக்கூடும்” என கூறிவிட்டாராம். இவ்வாறு அந்தணன் தனது வீடியோவில் பகிர்ந்துகொண்டார்.
“தக் லைஃப்” திரைப்படம் கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்கவில்லை என்றால் அத்திரைப்படம் வெளியாகாத பட்சத்தில் கமல்ஹாசனுக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது.

5 months ago
42









English (US) ·