கலங்கி நின்ற விவசாயி.. கூண்டோடு வந்த வனத்துறை.. கோவையில் தொடரும் சிறுத்தை அச்சம்!

1 month ago 28
ARTICLE AD BOX

கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள முருகன்பதி, பழைய மந்தை தோட்டத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவரது தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தை ஒன்று நேற்று இரவு கொடூரமாக தாக்கிக் கொன்றுள்ளது.

முன்னதாக, தங்கராஜ் தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவும் ஆடுகளை தோட்டத்தில் கட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர், இன்று காலை ஆடுகளைப் பார்க்க வந்தபோது, ஒரு ஆடு சிறுத்தையால் தாக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும், சிறுத்தையின் கால் தடங்கள் சம்பவ இடத்தில் காணப்பட்டதால், இது சிறுத்தையின் தாக்குதலாக இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகித்தனர். இதனையடுத்து, இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, அங்குள்ள கால் தடங்களை ஆய்வு செய்து, இது சிறுத்தையின் தாக்குதல் தானா என்பதனை உறுதி செய்து அதனைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leopard in Coimbatore

இந்த நிலையில், சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினரால் அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, வனத்துறையினர் இப்பகுதியில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

இதையும் படிங்க: வருங்கால CM புஸ்ஸி ஆனந்த்.. கைவிரித்த ECR சரவணன்.. நடந்தது என்ன?

அதேநேரம், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்றும், தங்கள் கால்நடைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

  • Raghava Lawrence helps பரிதவித்த சூப்பர் சிங்கர் போட்டியாளரின் அம்மா..ஓடி வந்த ‘ராகவா லாரன்ஸ்’..குவியும் பாராட்டு.!
  • Continue Reading

    Read Entire Article