ARTICLE AD BOX
அதிரிபுதிரி ஹிட்…
“லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான நிலையில் இப்போது வரை உலகளவில் ரூ.200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் சர்ச்சையை கிளப்பிய நிலையில் 24 காட்சிகளை நீக்கிவிட்டு மறுசென்சார் செய்யப்பட்டுள்ளது.
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில் மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், பிரித்விராஜ் உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே இத்திரைப்படத்திற்கு சர்ச்சை எழுந்து அடங்கியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை எழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான்.
கலவரத்தை தூண்டும் எம்புரான்…
“எம்புரான்” திரைப்படத்தில் அணைக்கட்டு குறித்து ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், “முல்லை பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் அவதூறு காட்சிகளை திரைப்படத்தில் இருந்து நீக்கவேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும் “ கேரளத்தின் பெரிய கலைஞர்கள் பலரும் தமிழ்நாட்டில் சொத்துக்கள் வாங்கி நிம்மதியாக வாழ்ந்து வரும் நிலையில், தமிழர்கள் மலையாள மக்களுக்கு எதிர்கள் போலவும், தமிழ்நாடு கேரளாவை அழிக்க முயல்வது போலவும் சித்தரிப்பது இனப்பகையை தூண்டி, கேரள தமிழ்நாடு மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்த முனையும் திட்டமிட்ட சதி” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

7 months ago
65









English (US) ·