ARTICLE AD BOX
சன் பிக்சர்ஸ்
சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன் நெட்வொர்க் அலுவலகம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ளது. 11 மாடிகள் கொண்ட மிகப்பிரம்மாண்டமான அலுவலகம் அது. இதில் 11 ஆவது மாடியில்தான் கலாநிதி மாறனின் ஆஃபிஸ் ரூம் இருப்பதாக கூறப்படுகிறது.

8 ஆவது மாடியில் என்ன சம்பவம்?
இந்த அலுவலகத்தில் 8 ஆவது மாடி மட்டும் பல வருடங்களாக பூட்டியே கிடக்கிறதாம். அந்த 8 ஆவது மாடியை Store Room ஆக பயன்படுத்தி வருவதாக கூட கூறுகிறார்களாம். இந்த நிலையில் கலாநிதி மாறனின் அறை அமைந்திருக்கும் 11 ஆவது மாடியை புதுப்பிக்கிறார்களாம். ஆதலால் அவரது அறையை 8 ஆவது மாடிக்கு மாற்றியுள்ளார்களாம்.
சமீபத்தில் அட்லி-அல்லு அர்ஜூன் ஆகியோர் இணையும் திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ ஒன்று வெளிவந்தது. அந்த வீடியோவில் இருவரும் கலாநிதி மாறனை சந்திப்பார்கள். அவர்கள் சந்தித்த அறை அந்த 8 ஆவது மாடிதானாம். இந்த தகவலை பத்திரிக்கையாளர் பிஸ்மி பகிர்ந்துகொண்டுள்ளார்.