ARTICLE AD BOX
சுமாரான வரவேற்பு
சந்தானம் நடிப்பில் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் கடந்த மே 16 ஆம் தேதி வெளியான “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது. இதற்கு முன்பு சந்தானம் நடிப்பில் வெளியான “டிடி ரிட்டன்ஸ்” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் அதே எதிர்பார்ப்பில் வெளிவந்த “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

“டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படத்தில் சந்தானத்தின் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். அந்த வகையில் இத்திரைப்படம் வெளியாகி 12 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் கலெக்சன் குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
இவ்வளவுதான் கலெக்சனா?
“டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் தற்போது வரை உலகளவில் வெறும் ரூ.19 கோடியே வசூலாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படம் ரூ.20 கோடி செலவில் படமாக்கப்பட்ட நிலையில் இத்திரைப்படம் வெளியாகி இத்தனை நாட்கள் ஆகியும் ரூ.19 கோடியே வசூல் ஆகியுள்ளதால் இத்திரைப்படம் தோல்வியடைந்துவிட்டதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
