ARTICLE AD BOX
பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் தற்கொலைக்கு முயற்சித்தாக வெளியான தகவல் திரையுலகை மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று முழுவதும் அவரது கணவர் சென்னையில் இருந்து போன் செய்த போது எடுக்காததால் சந்தேகமடைந்த அவர், குடியிருப்பு சங்கத்தின் மூலமாக தகவல் அனுப்பினார்.
அவர்கள் சென்று கதவை தட்டிய போது திறக்கப்படாததால், போலீசாருக்கு தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் மயங்கி கிடந்த கல்பனாவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டது மருத்துவர்கள் பரிசோதனையில் தெரிந்தது. தற்போது இவர், நலமுடன் உள்ளதாகவும், மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கல்பனா மகள் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது தாய் கல்பனா சிகிச்சை பெற்று வருவதை நேரில் பார்வையிட்டு பின்னர் செய்தியாளரிடம் பேசுகையில் எனது அம்மா தற்கொலை செய்து கொள்ளவில்லை.
மன அழுத்தம் காரணமாக தூக்க மாத்திரைகள் சற்று அதிக அளவில் எடுத்துக்கொண்டுள்ளார். தயவுசெய்து இந்த தகவலை மாற்றாதீர்கள் மற்றும் தவறாக சித்தரிக்க வேண்டாம். மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைளை சாப்பிட்டுள்ளார். அது கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிட்டது.
தற்கொலை முயற்சி அல்ல : மகள் விளக்கம்!
எனது அம்மா கல்பனா தற்கொலை முயற்சி செய்யவில்லை, மனஅழுத்தம் காரணமாக மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரையின் வீரியம் தான் காரணம், தயவு செய்து இந்த விவகாரத்தை திசை திருப்ப வேண்டாம்
– கல்பனா மகள் வேண்டுகோள்#Trending | #SingerKalpana | #overdose |… pic.twitter.com/1zI6WERWIS
எங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எனது அம்மா நலமுடன் இருக்கிறார் விரைவில் வீட்டிற்கு திரும்புவார் என அவர் தெரிவித்தார்.