ARTICLE AD BOX
கணவனிடம் இருந்து பணம் வாங்குவதற்காக கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை அனுப்பி மிரட்டல் விடுத்த மனைவியின் சம்பவத்தால் உயிர் போனதுதான் மிச்சம்.
ஹரியானா மாநிலம் ரோக்கத் மாவட்டத்தில் வசித்து வரும் அஜய் என்பவர் சமூக வலைதளம் மூலம் திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். ஆனால் திவ்யா ஏற்கனவே திருமணமானவர் என்ற உண்மையை மறைத்துள்ளார். முறையான விவாகரத்து பெறாமல் அஜய்யுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இது அஜய்க்கு தெரியவந்ததும், இது குறித்து சண்டை போட்டால் மகன் எதிர்காலத்துக்கு ஆபத்து என கருதி, திவ்யாவுடன் சேர்ந்து வாழ தொடங்கினார்.
திவ்யாவும் வேலைக்கு செல்வதாக கூறி, அடிக்கடி தாமதமாக வந்துள்ளார். ஒரு சில நாட்கள் வீட்டுக்கே வராமல் வெளியில் தங்கியிருந்துள்ளார்.
கணவன் அஜய்க்கு சந்தேகம் ஏற்பட, அப்பகுதியில் வசித்து வந்து போலீஸ் கான்ஸ்டபிள் தீபக் என்பவருடன் திருமணம் மீறிய தகாத உறவு திவ்யா வைத்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து இருவரையும் எச்சரித்துள்ளார் அஜய். ஆனால் இதை பற்றி வெளியே கூறினால் மகனை கொன்றுவிடுவதாக திவ்யா மற்றும் தீபக் மிரட்டியுள்ளனர்.
இதனால் எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்துள்ளார் அஜய். இந்த நிலையில் தீபக் பதவி உயர்வுக்காக பணம் வேண்டும் என திவ்யா, தனது கணவர் அஜய்யிடம் ரூ.5 லட்சம் வாங்கியுள்ளார்.
மனதளவில் பாதிக்கப்பட்ட அஜய், திவ்யா பணம் கேட்கும்போதெல்லாம் கொடுத்துள்ளார். தன்னிடம் இருந்த நகைகளை விற்று ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், மேலும் பணம் வேண்டும் என திவ்யா கேட்க, அஜய் தன்னிடம் பணம் சுத்தமாக இல்லை என கூறியுள்ளார். இதையடுத்து, மாமனாரான உனது தந்தையை கொன்றுவிட்டு அவரின் சொத்துக்களை விற்று பணத்தை கொடு என அஜய்யை மிரட்டியுள்ளார் மனைவி திவ்யா.
அது மட்டுமல்லாமல், தீபக்குடன் கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்டு நெருக்கமாக இருந்த வீடியோக்களை கணவன் அஜய்க்கு அனுப்பி மிரட்டியுள்ளார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த அஜய் தற்கொலை செய்துள்ளார். தற்கொலை செய்யும் முன்வு வீடியோ வெளியிட்ட அவர், மனைவி திவ்யா மற்றும் கள்ளக்காதலன் தீபக்தான் காரணம். என்னிடம் வாங்கிய பணத்திற்கான ஆதாரம் என்னுடைய வீட்டில் ஃபைப்லி வைத்துள்ளேன. அந்த பணத்தை வாங்கி என் பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுங்கள்.
என் தந்தையை கொலை செய்ய சொல்கிறாள் என் மனைவி திவ்யா. பெற்ற அப்பனை என்னால் கொல்ல முடியாது. எனவே நான் தற்கொலை செய்கிறேன், என் மகனை என் பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுங்கள்.
பெண்கள் தவறு செய்துவிட்டு கண்ணீர் சிந்தினால் அவர்கள் சொல்வது உண்மை என சமூகமே நம்புகிறது. ஆண்கள் மீதும் கருணையை காட்டுங்கள் என கூறிவிட்டு தற்றகொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணையை துரிததப்படுத்தியுள்ள போலீசார், தலைமறைவாக உள்ள தீபக், திவ்யாவை தேடி வருகின்றனர்.