ARTICLE AD BOX
நாமக்கல்லில் கள்ளக்காதலிக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதால், அவரைக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், வெப்படையில் இளம்பெண் ஒருவர் வீட்டில் கழுத்தறுக்கபட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, வெப்படை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, பெண்ணின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இதன் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண் கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியைச் சேர்ந்த சித்ரா (27) என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவருடன் தங்கியிருந்த நபர் குளித்தலையைச் சேர்ந்த அருள்பாண்டியன் (35) என்பதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் அருண்பாண்டியனைப் பிடிக்கும் பணியில் இறங்கினர். இதன்படி, வெப்படை அருகே உப்புபாளையம் பகுதியில் பதுங்கி இருந்த அருள்பாண்டியனை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, அருள்பாண்டியன் அளித்த வாக்குமூலத்தில், “கரூர் மாவட்டம் குளித்தலை தான் எனக்குச் சொந்த ஊர். கருத்து வேறுபாடு காரணமாக எனது மனைவி என்னைப் பிரிந்து சென்றுவிட்டார்.
அதே பகுதியைச் சேர்ந்த சித்ராவும் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். நாங்கள் இருவரும் குளித்தலை பகுதியில் வேலைக்குச் செல்லும்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாகவும் மாறியது. இதனையடுத்து, நாமக்கல் பகுதியில் உள்ள நூற்பாலைக்கு இருவரும் வந்தோம்.
பின்னர், வெப்படை சந்தைப்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் கணவன் – மனைவி போல் வாழ்ந்து வந்தோம். இந்த நிலையில், நூற்பாலையில் வேலை பார்க்கும் ஒருவருடன் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவள் அவருடன் நெருங்கிப் பழகினார். இது எனக்கு ஆத்திரத்தை மூட்டியது.
இதையும் படிங்க: நண்பர்கள் கண்முன்னே பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்.. கர்நாடகாவை உலுக்கிய சம்பவம்!
எனவே, அந்த நபருடன் பழகுவதை நிறுத்துமாறு பலமுறை எச்சரித்தேன். ஆனால், நான் சொல்வதை சித்ரா காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவள் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்தாள். இதனை நான் கண்டித்ததால் எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு எங்களுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நான், கத்தியை எடுத்து சித்ராவின் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்” எனக் கூறியுள்ளார். இதனையடுத்து, அருள்பாண்டியனை குமாரபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி முன் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

7 months ago
86









English (US) ·