கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

6 days ago 12
ARTICLE AD BOX

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டு க.பரமத்தி போலீசார் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிணவறையில் உடற்கூறு ஆய்வு செய்த பிறகு கரூர் பாலாமாபுரம் மயானத்தில் 28.04.2025 அன்று அடையாளம் தெரியாத உடல் என புதைக்கப்பட்டது.

இதையும் படியுங்க: 16 வயது சிறுவனுடன் உடலுறவு.. வசமாக சிக்கிய 35 வயது டீச்சர்!

இந்நிலையில் கோவை மாவட்டம், பீளமேடு காவல் நிலையத்தில் நபர் ஒருவரை காணவில்லை என்ற புகாரில், கரூருக்கு வந்து பீளமேடு போலீசார் பார்வையிட்டபோது, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிகாமணி (47) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து கரூர் வட்டாட்சியர் குமரேசன் முன்னிலையில் சிகாமணியின் உடல் மறு கூறாய்வு செய்தனர்.

விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் காத்திருந்தன. கோவை காந்திமாநநகரை சேர்ந்த தியாகராஜன் என்பவர் தனது மனைவியை பிரிந்து வசித்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த கோமதி என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

பின்னர் கோமதியும் தனது கணவரை பிரிந்து 2 மகள்களுடன் வாழ்வதை அறிந்து, 4 பேரும் ஒன்றாக ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

2 மகளில் ஒருவரான சாரதாவுக்கு குணவேல் என்பவருடன் திருமணம் நடத்தி வைத்தனர். ஆனால் குணவேலுக்கு சாரதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் பிரிந்தனர். மேலும் தியாகராஜன், குணவேலை அழைத்து பேச்சுவார்ததை நடத்திய போது, கைகலப்பாக மாறிய ஒரு கட்டத்தில் குணவேலை கடந்த 2016ஆம் ஆண்டு கொலை செய்தார்.

இந்த வழக்கில் தியாகராஜன் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மேல் முறையீடு செய்து ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது சாரதா வேலைக்காக துபாய் சென்றார்.

அங்கு தான் திருவாரூரை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் சிகாமணியுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் கணவன் மனைவி போல ஒன்றாக வசித்து வாழ்ந்து வந்தனர். அந்த சமயத்தில் சிகாமணிக்கு ரூ.6 லட்சத்தை கொடுத்துள்ளார் சாரதா.

ஒரு கட்டத்தில் அந்த பணத்தை திருப்பி கேட்ட போது, இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்தது. கருத்து வேறுபாடு காரணமாக சிகாமணியை பிரிந்து சாரதா கோவை வந்தார். மேலும் தனக்கு நடந்ததை தியாகராஜனிடம் கூறினார்.

இந்த நிலையில் சாரதாவை சமாதானம் செய்யலாம் என கோவை வந்தார் சிகாமணி. விமான நிலையத்திற்கு சென்று சிகாமணியை வரவேற்ற சாரதா குடும்பம், சிறப்பாக கவனித்துள்ளனர்.

மேலும் சிகாமணியை கொலை செய்ய நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி பசுபதி பாண்டியன் கூட்டாளியான புதியவன் என்பவரை கோவைக்கு அழைத்து வந்துள்ளனர். சிகாமணி இரவில் பீர் குடிக்கும் போது அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை கொடுத்துள்ளனர். மயங்கி விழுந்த அவரை ஆத்திரம் தீர அடித்துள்ளார் சாரதா.

Dubai Travels owner murdered after coming to Coimbatore to see his illegal girl friend

பின்னர் சடலத்தை கரூர் அருகே வீசி வந்துள்ளனர். சாரதா மீண்டும் துபாய்க்கு கிளம்பினார். இந்த சம்பவத்தில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்ட உடன், தியாகராஜன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

சாரதா மற்றும் சிலரை தேடி வருகின்றனர். மேலும் மறு உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகு திருவாரூர் மாவட்டத்திற்கு உடலை பெற்றுச் சென்ற உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • tvk reference in tourist family movie தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?
  • Continue Reading

    Read Entire Article