ARTICLE AD BOX
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி அருகே வண்டிப்பெரியார் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியம் பெண் போலீஸ், அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள கழிவறையில் உடை மாற்றுவதும், கழிவறை கழிக்க பயன்படுத்தி வந்துள்ளார்.
இதையும் படியுங்க: தோல்வி பயத்தால் முருகன் மாநாட்டுக்கு இடையூறு.. CM மற்றும் அமைச்சர் மீது தமிழக பாஜக குற்றச்சாட்டு!
ஆனால் அந்த கழிவறையில் 4 ரகசிய கேமராக்கள் இருந்துள்ளன. கேமரா மூலம் பெண் குளிப்பதை, உடை மாற்றுவதையும் கண்காணித்து வந்துள்ளார் மர்மநபர்.
மேலும் இதே போன்று அந்த கழிவறையை பயன்படுத்திய பல பெண் போலீசாரையும் கண்காணித்து அந்த வீடியோவை போட்டுக் காட்டி ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டியுள்ளார்.
 இது குறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இந்த கொடூர செயலில் ஈடுபட்டது வைசாக் என்ற போலீசார் தான் என தெரியவந்தது.
அவரை அதிரடியாக கைது செய்த போலீசார், விசாரணை செய்தததில் உண்மையை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் ஏழு மாதங்களாக பெண் போலீஸ் உடை மாற்றுவதை செல்போனில் வீடியோவாக எடுத்து பார்த்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.
 
                        4 months ago
                                45
                    








                        English (US)  ·