ARTICLE AD BOX
திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி பார்வதி தம்பதியினர். இவர்களுக்கு நாட்டார் ஸ்ரீதேவ் என்ற மகனும் ஆதிரா என்ற 3 மூன்று வயது மகளும் உள்ளார். பெரியசாமி அதே பகுதியில் வெல்டிங் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.
இதையும் படியுங்க: ராயல் சல்யூட்… பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம் : சோகத்தில் மூழ்கிய கிராமம்!
நேற்று மாலையில் பெரியசாமியின் மனைவி பார்வதி தனது மகள் ஆதிராவுடன் வீட்டில் தனியாக இருந்த போது, நபர் ஒருவர் வீடு புகுந்து நகையை பறிக்க முயன்றதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் மகள் ஆதிராவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்த சம்பவத்தில் அதிரடி திருப்பமாக போலீசார் தாய் பார்வதியிடம் கிடுக்கு பிடி விசாரணை நடத்தியதில் தாய் பார்வதி தான் குழந்தை ஆதிராவை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில் தாய் பார்வதி கடந்த ஓராண்டுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளதாகவும் அதற்கு திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்தனர் இதன் காரணமாகவே நேற்று மாலையில் மகள் ஆதிராவை பார்வதி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
மனநலம் பாதிக்கப்பட்ட தாய் மூன்று வயது மகளை கழுத்தை நிறுத்தி கொலை செய்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.