ARTICLE AD BOX
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகராக வலம் வரும் கவின், “கிஸ்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இதில் கவினுக்கு ஜோடியாக பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் விடிவி கணேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜென் மார்ட்டின் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் டிரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் யாராவது உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பதை கவின் பார்த்துவிட்டால் அந்த முத்தம் கொடுத்த நபர்களின் வருங்காலம் கவினின் கண்முன் வந்துபோகிறது. இவ்வாறு ஒரு வித்தியாசமான சக்தி கவினிடம் உள்ளது. இவ்வாறு ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. மிகவும் காமெடியான கலகலப்பான திரைப்படமாக இத்திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக டிரெயிலரின் மூலம் தெரிய வருகிறது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் இதோ…
