காசு கொடுத்து புரொமோட் செய்யும் கமல்ஹாசன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்! ரொம்ப மோசம்…

3 months ago 33
ARTICLE AD BOX

மோசமான திரைப்படம்?

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் அதிகளவு எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள “தக் லைஃப்” திரைப்படத்திற்கு மிக மிக சுமாரான வரவேற்பே கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாது “இது மிகவும் மோசமான திரைப்படம்” என்றும் ரசிகர்கள் கடுமையாக திட்டி வருகின்றனர். 

“மணிரத்னம் இப்படி ஒரு கேவலமான திரைப்படத்தை எடுப்பார் என்று கனவில் கூட நினைத்துப்பார்க்கவில்லை” என ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் செய்துள்ள காரியம் பலரையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

kamal haasan gave money to instagram influencers to promote thug life

இதெல்லாம் ஒரு பொழப்பா?

அதாவது கமல்ஹாசன் இன்ஸ்டா பிரபலங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு மிகுந்த பிரபலங்களுக்கு காசு கொடுத்து “தக் லைஃப்” திரைப்படத்திற்கு புரொமோஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பல இன்ஸ்டா பிரபலங்கள் நேற்றில் இருந்து “தக் லைஃப்” திரைப்படத்தில் கமல்ஹாசன் நன்றாக நடித்திருக்கிறார், சிம்பு நடிப்பு அபாரம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை அற்புதம், நெகட்டிவ் விமர்சனங்களை நம்பி திரையரங்கிற்குச் செல்லாமல் இருந்துவிடாதீர்கள் என அத்திரைப்படத்திற்கு புரொமோஷன் செய்து வருவதை பார்க்க முடிகிறது. 

படம் மிகவும் கடுமையான விமர்சனத்திற்குள்ளான நிலையில்தான் கமல்ஹாசன் இவ்வாறு காசு கொடுத்து புரொமோட் செய்கிறார் என்ற கருத்து நிலவுகிறது. இதனால் நெட்டிசன்கள் கமல்ஹாசனை மிகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

  • kamal haasan gave money to instagram influencers to promote thug life காசு கொடுத்து புரொமோட் செய்யும் கமல்ஹாசன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்! ரொம்ப மோசம்…
  • Continue Reading

    Read Entire Article