ARTICLE AD BOX
கோவை மதுக்கரை நாச்சிபாளையம் அருகே பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. மதுக்கரை போலீசார் விசாரித்த நிலையில், அந்த பெண்ணின் பெயர் பத்மா என்றும், அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியதும் தெரியவந்தது.
வீட்டில் இருந்து 400மீ தொலைவில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து நேரில் வந்த, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார்
இதையும் படியுங்க : பிரியாணியில் பூச்சி.. 10 பிரியாணி, ஆம்லேட் கேட்ட ஐடி ஊழியர்கள்.. இறுதியில் ட்விஸ்ட்!
அப்போது அவர் சந்தேக மரணம் என்ற அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் ஆசிரியராக பணியாற்றுவதும் அவரை நேற்று காணவில்லை என அவரது மகன் மற்றும் மகள் தெரிவித்திருந்த நிலையில் காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் தேடி வந்த நிலையில் இன்று காலை காணாமல் போன ஆசிரியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று ஆசிரியர் பயணித்த வாகனம் கிடைத்த நிலையில் அவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஆசிரியர் பயணித்த வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அவருக்கு பல பிரச்சினைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அவையெலாம் விசாரணையில் உறுதிப்படுத்தாமல் தெரிவிக்க முடியாது தற்போதைக்கு சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.