ARTICLE AD BOX
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு குத்தாட்டம் போட்டு கல்லா கட்டி வருகிறார்.
ஒரு பாட்டுக்கு ஆடுவதென்றால் பல கோடி கேட்கும் தமன்னாவுக்கு கைவசம் ஏராளமான படங்கள் உண்டு. ஒரு பாட்டுக்கு கோடி கொட்டி கொடுக்க தயாரிப்பாளர்களும் வரிசை கட்டி நிற்கிறார்களாம்.
இந்த நிலையில் எந்த சர்ச்சையில் சிக்காத தமன்னா அண்மை காலமாக சிக்கித் தவித்து வருகிறார். காரணம் வெப் சீரியசில் சக நடிகருடன் நெருக்கம் காட்டியதுதான் காரணம்.
விஜய் வர்மாவுடன் ஜோடியாக நடித்தது முதலே பல கேள்விகள் மீடியாக்கள் முன் வைத்தன. ஆனால் தொடர்ந்து அவருடன் பல நிகழ்ச்சிகளில் தலை காட்டி வந்த தமன்னா காதலை உறுதியாக வெளிப்படுத்தினார்.

தமன்னா தற்போது விஜய் வர்மாவை பிரேக்கப் செய்ததாக கூறப்படுகிறது. இன்ஸ்டாவில் இருக்கும் போட்டோக்களையும் இருவருமே நீக்கிவிட்டனர். சில வாரத்திற்கு முன் பிரிந்துவிட்டதாக அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் கூறியுள்ளார். இதனால திரையுலகில் பரபரப்பு எகிறியுள்ளது.
