காதலிக்காக போட்ட திட்டம்.. சென்னையில் இரட்டைக் கொலை.. ப்ளான் மிஸ்ஸிங்கால் பறிபோன உயிர்!

7 hours ago 3
ARTICLE AD BOX
Chennai Double Murder today

சென்னையில், காதலியின் கொலைக்கு பழிவாங்க நினைத்த நபர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை: சென்னை, கோட்டூர்புரம் அடுத்த சித்ரா நகரைச் சேர்ந்தவர் அருண். இவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளியாவார். இந்த நிலையில், இவரும் இவரது நண்பர் படப்பை சுரேஷ் என்பவரும், கோட்டூர்புரம் நாகவல்லி அம்மன் கோயில் அருகே நேற்று இரவு மது அருந்திவிட்டு படுத்திருந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், அருண் மற்றும் படப்பை சுரேஷ் ஆகியோரை அரிவாளால் சரமாரியாக கொடூரமாக வெட்டியுள்ளனர். இவர்களது அலறல் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு வருவதற்குள், மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதில், படுகாயம் அடைந்த படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ரத்த வெள்ளத்தில் உயிரோடு இருந்த அருணை மீட்டு, சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அருண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Chennai Double Murder contiguous

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த 2022ஆம் ஆண்டு, அருணின் காதலி சாயின்ஷாவை, ரவுடி சுக்கு காபி சுரேஷ் படுகொலை செய்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: கூட்டணி மாறும் விசிக? தவெகவுக்கு பதில்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

எனவே, காதலியின் கொலைக்கு பழிவாங்க அருண் திட்டமிட்டிருந்த நிலையில், சுக்கு காபி சுரேஷ் முந்திக்கொண்டு, அருண் குமார் மற்றும் அவரது அண்ணன் அர்ஜுனன் ஆகியோரைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால், அர்ஜுனனுக்குப் பதிலாக அருணுடன் சேர்த்து படப்பை சுரேஷை தவறுதலாக வெட்டிக் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் தனிப்படை அமைத்து மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்.

The station காதலிக்காக போட்ட திட்டம்.. சென்னையில் இரட்டைக் கொலை.. ப்ளான் மிஸ்ஸிங்கால் பறிபோன உயிர்! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.

Read Entire Article