ARTICLE AD BOX
தெலுங்கானாவில் காதலை கைவிடச் சொன்ன காதலியின் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்ற காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள சுட்டலபள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சுஷ்மிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், இந்தக் காதல் சுஷ்மிதாவின் தாய் சாமந்திக்குப் பிடிக்கவில்லை.
இதனால், மகளிடம் இந்த காதல் வேண்டாம், விட்டுவிடு என எடுத்துக் கூறியிருக்கிறார். ஆனால், சுஷ்மிதா அதனை ஏற்க மறுத்துள்ளார். பின்னர், உடல்நிலை பாதிக்கப்பட்ட தன்னுடைய கணவரின் நிலை குறித்து மகளுக்கு எடுத்துக் கூறிய சாமந்தி, கண்ணீருடன் பேச மகள் மனமுருகி, தனது காதலை கைவிட முன் வந்துள்ளார்.

இதனையடுத்து ராஜ்குமாரை அழைத்து அனைத்து விவரங்களையும் எடுத்துக் கூறி காதலை விட்டுவிடுவோம் எனக் கூற, ராஜ்குமார் தன்னுடைய காதலுக்கு வில்லியாக புறப்பட்ட காதலி சுஷ்மிதாவின் தாய் சாமந்தியை தீர்த்துக் கட்டிவிட்டால் அனைத்தும் சரியாகி விடும் என நினைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: அஜித்துக்காக தனுஷ் எடுக்க போகும் தரமான சம்பவம்…ஒருவேளை இருக்குமோ.!
இதற்காக திட்டமிட்ட அவர், காதலியின் வீட்டுக்குச் சென்று பட்டப்பகலில் சாமந்தியுடன் தகராறு செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறிய ராஜ்குமார், சாமந்தியை கீழே தள்ளி கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளார். இதனைப் பார்த்த கிராமத்தினர், ராஜ்குமாரை மடக்கிப்பிடித்து சாமந்தியை மீட்டதுடன், போலீசாருக்கு தகவல் கொடுத்து அவரை பிடித்துக் கொடுத்துள்ளனர்.
