ARTICLE AD BOX
டாப் நடிகை
தென்னிந்தியா, பாலிவுட் என இந்தியாவின் இரண்டு பிரதான திரைத்துறைகளில் டாப் நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். “லக்” என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்குள் கதாநாயகியாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் “ஏழாம் அறிவு”, “3”, “பூஜை”, “புலி”, “வேதாளம்”, “சிங்கம் 3”, “லாபம்” ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்த ஸ்ருதிஹாசன் தற்போது “கூலி, “ஜனநாயகன்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவைகளை தொடர்ந்து “சலார் பார்ட் 2” திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

கல்யாணம் மட்டும் வேண்டாம்?
ஸ்ருதிஹாசன் முதலில் மைக்கேல் கார்செல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். ஆனால் 2019 ஆம் ஆண்டு இருவருக்கும் பிரேக்கப் ஆனது. அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை சந்தனு ஹசாரிகா என்பவருடன் உறவில் இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஸ்ருதிஹாசன், “எனக்கு காதலிப்பது பிடிக்கும். ஆனால் கல்யாணத்தில் ஆர்வம் இல்லை. அதனை பற்றி யோசித்ததே இல்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?” என பேட்டியளித்துள்ளார். பெரும்பாலும் திருமணம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்து வந்த ஸ்ருதிஹாசன் தற்போது இது குறித்து வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.