ARTICLE AD BOX
பிரபலங்கள் விவாகரத்து பெறுவது தற்போது சகஜமாக மாறிவிட்டது. அதுவும் ஒரு சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று வருகின்றனர்.
இதையும் படியுங்க: ‘வீர தீர சூரன்’ படத்திற்கு தடை… ரசிகர்கள் ஏமாற்றம்..!
அப்படித்தான் இந்திய சினிமாவில் உச்ச நடிகராக உள்ள ஹிருதிக் ரோஷன் தன்னுடைய காதல் மனைவியை விவாகரத்து செய்தார். ஆனால் இருவரும் நண்பர்கள் போல வாழ்ந்து வருகின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், ஹிருதிக் தன்னுடைய காதலியுடனும், அவரது மனைவி அவருடைய காதலருடன் சுற்றி வருகின்றனர். 2000ஆம் ஆண் ஹிருதிக் தன்னுடைய காதலியான சூசன் கானை திருமணம் செய்தார்.

இந்த ஜோடிக்கு இருமகன்கள் உள்ள நிலையில் கடந்த 2014ல் இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்த நிலையில் முன்னாள் மனைவிக்கு ரூ.380 கோடி ஜீவனாம்சம் கொடுத்துள்ளார் ஹிருதிக் ரோஷன்.
