காந்தாராவில் சிவகார்த்திகேயன் பட நடிகையா? சஸ்பென்ஸை உடைத்து ஷாக் கொடுத்த படக்குழு!

1 month ago 6
ARTICLE AD BOX

பல இடையூறுகளை தாண்டி…?

ரிஷப் ஷெட்டி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்  “காந்தாரா”. இத்திரைப்படத்தை ரிஷப் ஷெட்டியே இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பஞ்சுருளி என்ற நாட்டார் தெய்வ கதையம்சத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாகும். இத்திரைப்படம் தென்னிந்தியா மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Rukmini vasanth starring in kantara chapter 1 movie 

அதனை தொடர்ந்து தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “காந்தாரா சேப்டர் 1” என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தையும் ரிஷப் ஷெட்டியே இயக்கி நடித்தும் உள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதில் இருந்து இத்திரைப்படத்தில் நடித்த மூன்று நடிகர்கள் பலியானார்கள். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. பஞ்சுருளி தெய்வத்தின் சாபமாக இருக்குமோ? என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டனர். எனினும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றது. 

காந்தாராவில் சிவகார்த்திகேயன் பட நடிகை!

இந்த நிலையில் “காந்தாரா சேப்டர் 1” திரைப்படத்தை தயாரித்துள்ள ஹொம்பாலே நிறுவனம் இன்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் பிரபல நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இதில் அவர் கனகவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இக்கதாபாத்திரத்தின் அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. 

pic.twitter.com/WZs3vM7TE5

— Hombale Films (@hombalefilms) August 8, 2025

கன்னட திரையுலகின் மூலம் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்த ருக்மிணி வசந்த், “சப்த சாகரதாச்சே எல்லோ” திரைப்படத்தின் மூலம் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தார். அதனை தொடர்ந்து தமிழில் விஜய் சேதுபதியின் “ஏஸ்” திரைப்படத்தில் நடித்திருந்த அவர் தற்போது சிவகார்த்திகேயனின் “மதராஸி” திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  

  • Rukmini vasanth starring in kantara chapter 1 movie காந்தாராவில் சிவகார்த்திகேயன் பட நடிகையா? சஸ்பென்ஸை உடைத்து ஷாக் கொடுத்த படக்குழு!
  • Continue Reading

    Read Entire Article