ARTICLE AD BOX
சின்னத்திரை டூ வெள்ளித்திரை
சந்தானம், சிவகார்த்திகேயன், கவின், ரியோ ஆகியோரின் வரிசையை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்குள் ஹீரோவாக தற்போது நுழைந்திருப்பவர்தான் KPY பாலா. “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பரவலாக அறியப்பட்ட பாலா, அதன் பின் “குக்கு வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் மிகப்பிரபலமாக ஆனார். இவரது டைமிங் மற்றும் ரைமிங் வசனங்களுக்காகவே பல ரசிகர்கள் உள்ளார்கள்.
அந்த வகையில் தற்போது KPY பாலா “காந்தி கண்ணாடி” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் பாலாவுக்கு ஜோடியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பாலாஜி சக்திவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

சம்பளம் வாங்காமல் நடித்த பாலா?
இந்த நிலையில் “காந்தி கண்ணாடி” திரைப்படத்திற்காக அட்வான்ஸ் மட்டுமே பெற்று நடித்தாராம் பாலா. தயாரிப்பாளர் பாலாவுக்கு இன்னும் சம்பளம் கொடுக்கவே இல்லையாம். இவரும் கேட்கவே இல்லையாம். படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த பிறகு தயாரிப்பாளர் தனக்கு நிச்சயம் சம்பளம் தருவார் என்று நம்பிக்கையில் இருக்கிறாராம் பாலா. இச்செய்தி இணையத்தில் வைரல் ஆன நிலையில் “இவ்வளவு நல்லவரா இருக்காரே இவரு” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் பாலா ஏற்கனவே பல சமூக சேவைகள் செய்து வருவது இதில் குறிப்பிடத்தக்கது.
