ARTICLE AD BOX
தமிழகத்தையே அதிரவைத்த குன்றத்தூர் டிக் டாக் அபிராமியின் தீர்ப்பு நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.
குன்றத்தூரை சேர்ந்த அபிராமி, தனது கணவர் விஜய், மகன், மற்றும் மகளுடன் வசித்து வந்த நிலையில், அருகில் உள்ள பிரியாணி கடைக்கு அடிக்கடி சென்ற போது, பிரியாணி மாஸ்டர் மீனாட்சி சுந்தரத்துடன் நெருக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. தகாத உறவில் அடிக்கடி இருவரும் இருந்த நிலையில், இருவரும் திருமணம் செய்யலாம் என திட்டமிட்டனர். ஆனால் குழந்தைகளை ஏற்க மீனாட்சி சுந்தரம் மறுத்துவிட்டார்.
குழந்தைகள் இடையூறாக உள்ளதால், அபிராமி அளவுக்கு அதிகமாக தூக்கு மாத்திரை கொடுத்து குழந்தைகளை கொடூரமாக கொன்றார். இந்த சம்பவத்தில் அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரத்தை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு நேற்று காஞ்சிபுரம் நீதிமன்றத்திற்கு வந்தது. தீர்ப்பு வாசிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையல், நீதிபதி செம்மல், நேற்று அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரத்தை குற்றவாளி என அறிவித்தார்.
உணவு இடைவேளைக்கு பின் தண்டனை குறித்த விபரங்களை வாசிப்பதாக கூறி சென்றார். ஆனால் போன 10வது நிமிடத்திலேயே திரும்பி வந்த டீநீதிபதி செம்மல், இப்படி ஒரு குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்காமல் எப்படி என்னால் சாப்பிட முடியும்?
அதனால் தண்டனை விபரங்களை வாசித்த பின்னர் சாப்பிட இருப்பதாக கூறி தீர்ப்பை வாசித்தார. இந்த வழக்கில் அபிராமிக்கும் மீனாட்சி சுந்தரத்துக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது தான் என் விருப்பம், ஆனால் இது காந்தி பிறந்த மண்.
ஒரு தாயே தன்னுடைய காம இச்சைக்காக கொலை செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எத்தனையோ பெண்கள் பிள்ளை பாக்கியம் இல்லாமல் தவமாய் தவமிருக்கின்றனர், அப்படி இருக்கு இது மன்னிக்க முடியாத குற்றம்.
முதல் குற்றவாளியான அபிராமிக்கும், அவருக்கு இணையாக மீனாட்சி சுந்தரத்திற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து உத்தரவிடுகிறேன் என அறிவித்தார்.
இதனிடையே 7 வருடம் ஏற்கனவே சிறையில் இருந்துவிட்டேன்,என தாய் தந்தை இருவரும் வயதானவர்கள், 70 வயதை கடந்தவர்கள் என அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என மீனாட்சி சுந்தரம் கோரிக்கை வைத்தார்.

அதே போல, அபிராமியும் எனது பெற்றோரை கவனித்து மீதி காலத்தை கழிக்க வேண்டும் என்றும், தண்டனையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்,. ஆனால் இதை எதையும் ஏற்காத நீதிபதி, காம இச்சைக்காக குழந்தைகளை கொல்லும் முன்பு இந்த பொறுப்பு இருந்திருக்க வேண்டும், உங்களுக்கு இரக்கம் காட்ட முடியாது என அதிரடியாக கூறிவிட்டார்.

இதைக் கேட்டு கோர்ட் வளாகத்தில் அபிராமி கண்ணீர் விட்டு கதறி அழுதார். பெண் போலீஸ் தோளில் சாய்ந்து கதறி அழுதார். அருகே அமர்ந்திருந்த மீனாட்சி சுந்தரமும் கதறி அழுதது சிறிது நேரம் பரபரப்பை கிளப்பியது.
