ARTICLE AD BOX
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி கழுத்தை அறுத்து பின்பு தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மதுரை ஜெய்ஹிந்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி சிவமணி (30) இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: என்னை எதுக்கு வேள்பாரி நிகழ்ச்சிக்கு கூப்பிட்டீங்க.. கமல்ஹாசனை கூப்பிட்டிருக்கலாம் : ஈகோ இல்லாத ரஜினி!
இந்நிலையில் சிவமணி தனது கூட்டாளிகளுடன் ஒரு காரில் கொடைக்கானல் சென்றுள்ளார். நேற்று இரவு மதுரை சாலையில் வத்தலக்குண்டு திருநகர் அருகே அந்த கார் வந்தபோது காரில் இருந்த சிவமணி மற்றும் அவரது கூட்டாளிகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறில் காருக்குள் வைத்து சிவமணியின் கழுத்தை அறுத்து அவரது கூட்டாளிகள் அரை உயிராய் துடித்துக் கொண்டிருந்த சிவமணியை சாலை ஓரம் இருந்த குடியிருப்பு பகுதிக்குள் தூக்கிச் சென்று தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.
குடியிருப்பு பகுதிக்குள் ரத்த வெள்ளத்தில் பிணம் கிடப்பதாக தகவல் அறிந்து வந்த நிலக்கோட்டை டி.எஸ்.பி செந்தில்குமார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார் இதனை அடுத்து போலீசார் சிவமணி உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர் கௌதம், சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா தலைமையிலான போலீசார் கொலை செய்துவிட்டு தப்பியோடி பின்னர் மதுரையில் பதுங்கி இருந்த சிவமணி கூட்டாளிகளான சூர்யா, மணிகண்டன், அருண், முனியாண்டி மற்றும் கார் டிரைவர் சரத் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கேங் லீடராக இருந்த சிவமணி கூட்டாளிகளை படாதபாடு படுத்தி வந்ததாகவும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.
வத்தலகுண்டில் மதுரை ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது