ARTICLE AD BOX
சென்னை திருமங்கலம் பள்ளி சாலையில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த அதிர்ச்சி விபத்தில் அயனாவரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நித்தின் சாய் உயிரிழந்தார்.
இருசக்கர வாகனத்தில் சென்ற நித்தின் சாய் மற்றும் அபிஷேக் என்பவரை சொகுசு ரேஞ்ச் ரோவர் கார் மோதியதில், நித்தின் சாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அபிஷேக் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். விபத்தை தொடர்ந்து, போக்குவரத்து காவலர்கள் வழக்கு பதிவு செய்தனர்.
இறந்த மாணவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்று குற்றம்சாட்டினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ரேஞ்ச் ரோவர் காரை வைத்து வேண்டுமென்றே விபத்து நிகழ்த்தப்பட்டதை உறுதி செய்தனர்.
விசாரணையில், பெண் தொடர்பான காதல் விவகாரம் இதற்கு காரணமாக இருப்பது தெரியவந்தது. பிரணவ் மற்றும் வெங்கடேசன் ஆகிய இரு கும்பல்களுக்கிடையேயான மோதலில், பிரணவ் சார்பாக சொகுசு காரில் வந்த திமுக பிரமுகர் தனசேகரின் பேரன் சந்துரு உள்ளிட்டோர் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாக்குவாதம் மோதலுக்கு மாறியதில், வெங்கடேசனை காரை வைத்து விரட்டி மோத முயற்சித்தனர். “யாராவது ஒருவரை கொன்றால்தான் நாம் யார் என தெரிய வரும்” என்று ஆத்திரத்தில் கூறிய சந்துரு, தாறுமாறாக காரை ஓட்டியபோது நித்தின் சாய் மற்றும் அபிஷேக் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, போலீசார் சந்துருவை கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் ஆரோன் என்பவர் சொகுசு காரை ஓட்டியது தெரியவந்துள்ளது, மேலும் தான் காரில் பயணம் மட்டுமே செய்ததாகவும், அபிஷேக் தரப்பை பயமுறுத்தவே அவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார்.
