ARTICLE AD BOX
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் லேசாக உரசியுள்ளது.
இதையும் படியுங்க: துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!
இதனால் ஆத்திரமடைந்த மூன்று இளைஞர்கள் காரை துரத்தி சென்று இருவேல்பட்டு பகுயியில் காரின் பின் பக்க கண்னாடியை கல்லால் அடித்து உடைத்துள்ளனர். மேலும் 20 கிலோ மீட்டர் வரை காரை துரத்தி சென்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து சஞ்சீவி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் தகவலை தெரிவித்துள்ளனர்.
விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட விழுப்புரம் அடுத்த கானை பகுதியை சேர்ந்த ராஜேஷ் (24). ராஜா(25) மற்றும் முன்படியம்பாக்கம் பகுதியை சேர்ன வினோத் (22)ஆகிய மூவரை திருவெண்ணெய் நல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
சம்பவத்தின் போது மூன்று இளைஞர்களும் மது போதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

7 months ago
60









English (US) ·