ARTICLE AD BOX
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நடந்த சாலை விபத்தில் கேரள நடிகர் ஷைன்டாம் சாக்கோ கார் விபத்துக்குள்ளானது.
கேரள மலையாள திரை உலக நடிகர் ஷைன் டாம் சாக்கோ இன்று காலை பெங்களூரில் இருந்து கேரளா செல்வதற்காக தனது காரில் ஓசூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார் .
இதையும் படியுங்க: நீதிமன்றத் தடையையும் மீறி வெளியான “தக் லைஃப்”… அதிர்ச்சியில் படக்குழுவினர்!
அவரது கார் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பாறையூர் பகுதியில் சென்றபோது நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தில் காரில் இருந்த ஷைன்டாம் சாக்கோ வின் தந்தை சாகோ ( வயது 70 ) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நடிகரி தாய் மரியா கர்மல் மற்றும் நடிகரின் சகோதரருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
நடிகரின் தந்தையின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த நடிகரின் தாய் மற்றும் நடிகர் ஷைன் டான் சாகோ லேசான காயங்களுடன் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

4 months ago
49









English (US) ·