ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் நாட்புற பாட்டை பாடி புகழ்பெற்றவர் சின்னபொண்ணு. இவர் நாட்டுப்புற பாட்டையே அடிமாற்றாமல் சினிமாவிலும் தனது பாணியை அப்படியே கடைபிடித்து வருபவர்.
அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், ஒரு முறை நாட்டுப்பு நல வாரிய பணிகளை முடித்துக் கொண்டு தஞ்சாவூர் திரும்பிக் கொண்டிருந்தோம்.
இதையும் படியுங்க: நடிகையை கட்டிப்பிடித்து கடித்த பிரபுதேவா.. படப்பிடிப்பில் நடந்த ஷாக் சம்பவம்!
அப்போது எங்கள் கார் பெரிய விபத்தில் சிக்கியது. இதில் நானும் என் கணவரும் பலத்த காயமடைந்து செத்து பிழைத்தோம். நாங்கள் இருவரும் இறந்துவிட்டோம் என செய்திகள் வெளியாகின.
இந்த செய்தி கனிமொழி கவனத்திற்கு செல்ல, பதறிய அவர், உடனே ஆட்களை அனுப்பி சின்னப் பொண்ணுக்கு என்னாச்சு என விசாரிக்க கூறியுள்ளார். உடனே விஷயம் தெரிந்த அவர்கள், மருத்துவமனைக்கு வந்து எங்களுடைய நலம் குறித்து மருத்துவரிடம் விசாரித்து கனிமொழியிடம் கூறியுள்ளனர்,.
உடனே கனிமொழி, நாங்கள் சிகிச்சை எடுத்த மருத்துவமனையை தொடர்பு கொண்டு, சின்ன பொண்ணுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும், முடியாவிட்டால் சென்னைக்கு அனுப்பிவிடுங்கள் என கூறியுள்ளார்.
உடனே நாங்கள் இருந்த வார்டுக்கு வந்த டீன், கனிமொழி மேடம் உங்க மீது எவ்வளவு மரியாதை வைத்துள்ளார். நேரடியாக தொடர்பு கொண்டு உங்களை கவனிக்க சொல்லியுள்ளா என டீன் கூறினார்.

எனக்கு நெற்றியில் இழுத்து வைத்து தையல் போட்தால் ஒரு மாதிரி கஷ்டமாக இருந்தது. அந்த ரேநத்தில் சங்கமம் நிகழ்ச்சிக்கு எல்லோரும் சென்றார்கள்.
நான் போக வேண்டாம் என வீட்டில் கூறியும், அடம்பிடித்து போனேன். அங்கு கனிமொழியை பார்த்ததும், என்னை வந்து பார்த்து நலம் விசாரித்தார். என் நெற்றியை காட்டி, பிளாஸ்டிக் சர்ஜரி செய்யணும் என சொன்னேன்,

உடனே அவர், அதெல்லாம் வேண்டாம், உங்க உழைப்கக்கான அடையானம், அப்படியே விட்டிருங்க என கூறியதால் அதை ப்படியே விட்டுவிட்டேன். அதனால்தான் நெற்றியில் இன்னும் தழும்பி அப்படியே உள்ளது என கூறினார்.
