ARTICLE AD BOX

சென்னை குன்றத்தூர் அருகே எலி மருந்து நெடியால் இரு குழந்தைகள் உயிரிழந்த நிலையில் பெற்றோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை: சென்னை அடுத்த குன்றத்தூர், மணஞ்சேரியைச் சேர்ந்தவர் கிரிதரன் (34). இவர் குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பவித்ரா. இந்த தம்பதிக்கு விஷாலினி (6) மற்றும் சாய் சுதர்சன் (4) ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
மேலும், கிரிதரன் வீட்டில் எலித் தொல்லை இருந்துள்ளது. இதன் காரணமாக, அவ்வப்போது எலிகளைக் கொல்வதற்காக எலி மருந்து மற்றும் எலி பேஸ்ட் ஆகியவற்றை பயன்படுத்தி வந்து உள்ளனர்.
இவ்வாறு எலியைக் கொல்வதற்காக வீட்டில் எலி மருந்து வைத்த நிலையில், அந்த மருந்தின் நெடி வீடு முழுவதும் பரவி உள்ளது. இந்த நெடியை சுவாசித்த குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் சில மணி நேரங்களில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து, உடனடியாக நான்கு பேரும் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ளனர். மேலும், மேல் சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இதையும் படிங்க: குடியால் சேர்ந்த நட்பு.. துரோகம் செய்த இளையராஜா ..அதிர்ச்சியில் ரஜினி
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த மகள் விஷாலினி மற்றும் மகன் சாய் சுதர்சன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதேநேரம், கணவன், மனைவி இருவரும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The station காற்றில் பறந்த எலி மருந்து.. 2 குழந்தைகள் பலியான சோகம்! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.