ARTICLE AD BOX
கிட்னி திருட்டு விவகாரம்… குற்றவாளிகளை தேடும் போலீஸ் : அமைச்சர் சொன்ன ஷாக் தகவல்!
மதுரையில் புதிய மருத்துவ கட்டிடங்கள் திறப்பு நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் அளித்த பேட்டியில்,”மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்ள புதிய கட்டிடத்தில் போதிய மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு போதிய புரிதல் இல்லாதது. ராஜாஜி மருத்துவமனைக்கு என பணியமர்த்தப்பட்ட 510 மருத்துவர்கள் ஏற்கனவே இருக்கிறார்கள்.
புதிய கட்டிடத்தை பராமரிப்பதற்காக 46 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். எனவே, தேவையான மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
நாமக்கல்லில் ஏற்கனவே இதே போல உடலுறுப்புகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுத்து தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
உடல் உறுப்புகளை விற்பனை செய்வது மனிதநேயமற்ற செயல்.
நாமக்கலில் கிட்னி திருட்டு தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உடலுறுப்புகளை விற்பனை செய்வதற்கான இந்திய தடை சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து பெறப்படுகிற உடலுறுப்புகள், தாமாக முன்வந்து தானம் அளிப்பவர்களின் உடலுறுப்புகள் என எதை விற்றாலும் தண்டிக்கப்படுவார்கள்.
யார் செய்தாலும் தண்டனைக்குரியது. இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. குற்றவாளிகள் தப்பவே முடியாது” என்றார்
 
                        3 months ago
                                44
                    








                        English (US)  ·