ARTICLE AD BOX
வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த செஞ்சி மோட்டூர் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள மலையில் கிறிஸ்தவ வழிபாட்டிற்காக தகடு சீட்டுகளைக் கொண்டு கூடாரம் அமைத்து அங்க இருக்க கூடிய கிறிஸ்தவ பொது மக்கள் வழிபட்டு வந்தனர்
மேலும் அந்தப் பகுதியில் மற்ற மதத்தை சார்ந்தவர்கள் மலைப்பகுதியில் இதுபோன்று மதத்தின் அடிப்படையில் கோயிலைக் கட்டி வழிபடக்கூடாது என ஏற்கனவே வருவாய் துறை அதிகாரியிடம் புகார் அளித்திருந்தனர்.
இதையும் படியுங்க: நாடு முழுவதும் 21 விமான நிலையங்கள் மூடல்… முன்பதிவு செய்தவர்களுக்கு கவலை வேண்டாம்!
புகாரின் பேரில் விசாரித்த வருவாய்த்துறையினர் மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த கூடாரத்தை அகற்ற வேண்டும் என ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றன
இதனைத் தொடர்ந்து இன்று காலை முப்பதுக்கு மேற்பட்ட வருவாய்த் துறையினர் செஞ்சி மோட்டூர் பகுதிக்கு வந்து மலையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தை அப்புறப்படுத்துவதற்காக முயற்சித்தனர்.
அப்போது இந்த பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் ஒன்றிணைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் காரணமாக சுமார் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்க இருக்கக்கூடிய பொதுமக்கள் அந்த கூடாரத்தை அப்புறப்படுத்த கூடாது எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் மேலே அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தை வருவாய்த்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.