ARTICLE AD BOX
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு சில கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இதையும் படியுங்க: அபாய கட்டத்தை தாண்டிய ரெட்ரோ? என்னைய காப்பாத்திட்டீங்க-சூர்யா ஹேப்பி அண்ணாச்சி!
இவரது மகள் சாரா டெண்டுல்கர், இந்திய அணி கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுடன் காதல் என ஆரம்பத்தில் இருந்தே பேசப்பட்டு வந்தது.

ஆனால் இதற்கு விடை கொடுக்கும் வகையில், சமீபத்தில் கில் அளித்த பேட்டியில், எனக்கும் சாராவுக்கும் காதல் எல்லாம் இல்லை. அது முற்றிலும் தவறான தகவல் என கூறியிருந்தார்.

இந்தநிலையில் பாலிவுட் நடிகரான சித்தாந்த் சதுர்வேதியுடன் சாரா காதலில் இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் டேட்டிங்கில் இருப்பதகாவும், ஏற்கனவே அமிதாப் பச்சன் பேத்தியுடன் சித்தாந்த் டேட்டிங் இருந்ததாகவும் வடநாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.
இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள், கில் ஓபனாக பேட்டி கொடுத்ததால்தான் சாரா தற்போது பாலிவுட் நடிகர் பக்கம் சாய்ந்துள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால்தான் காதலை முறித்துக்கொண்டதாக கூறுகின்றனர்.
