ARTICLE AD BOX
ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வரும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி குக் வித் கோமாளி, சிரிப்பும் சமையலும் கலந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக தொடர்ந்து வெற்றிகரமாக பயணம் செய்து வருகிறது.
ஐந்தாவது சீசனுக்கு பின் தற்போது சீசன் 6 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பைனல் எபிசோடு இந்த வார இறுதியில் ரசிகர்கள் முன்னே ஒளிபரப்பாக இருக்கிறது.
இதற்கிடையில், இறுதி போட்டிக்கான ஷூட்டிங் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, யார் இந்த சீசனின் பட்டத்தை கைப்பற்றியுள்ளார் என்ற விவரம் இணையத்தில் கசிந்துள்ளது.

கசிந்த தகவல்களின் படி, இந்த முறை பட்டம் பெற்றவர் ஷபானா என கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் அந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
