குக் வித் கோமாளியில் சிறகடிக்க ஆசை நடிகரா? இணையத்தில் லீக் ஆன போட்டியாளர்களின் பட்டியல்!

1 week ago 14
ARTICLE AD BOX

ஸ்ட்ரெஸ் பஸ்டர்

தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress Buster என்று பலரும் கூறுகின்றனர். இதுவரை ஒளிபரப்பட்ட 5 சீசன்களும் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தன. அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளியின் 6 ஆவது சீசன் வருகிற மே மாதம் 4 ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. 

மூன்று நடுவர்கள்

முதல் 4 சீசன்களில் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். கடந்த 5 ஆவது சீசனில் வெங்கடேஷ் பட் வெளியேற மாதம்பட்டி ரங்கராஜ் புதிய நடுவராக இணைந்தார். அதனை தொடர்ந்து தற்போது 6 ஆவது சீசனில் மாதம்பட்டி ரங்கராஜ், தாமு ஆகியோருடன் செஃப் கௌஷிக் இணைந்துள்ளார். 

cooku with comali season 6 contestants list

போட்டியாளர்கள் இவர்கள்தான்…

இன்று மாலை 6 மணிக்கு குக் வித் கோமாளி 6 ஆவது சீசனின் போட்டியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவுள்ளன. எனினும் அதற்கு முன்பே சில போட்டியாளர்களின் பெயர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. 

அதாவது எதிர்நீச்சல் தொடரின் மூலம் பிரபலமான நடிகை மதுமிதா குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளாராம்.

cooku with comali season 6 contestants list

அதே போல் சிறகடிக்க ஆசை புகழ் ஸ்ரீதேவாவும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. 

cooku with comali season 6 contestants list

இதனை தொடர்ந்து நடிகர் விஜய்யின் நண்பர் சஞ்சீவின் மனைவியான பிரீத்தி சஞ்சீவும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

cooku with comali season 6 contestants list

எனினும் இன்று மாலை 6 மணிக்கு  போட்டியாளர்களின் பெயர்களை விஜய் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். 

புதிய கோமாளிகள்

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் புகழ், குரேஷி, சுனிதா, ராமர், கேபிஒய் சரத் போன்ற பிரபல கோமாளிகள் இடம்பெறும் நிலையில் சௌந்தர்யா நஞ்சுண்டன், சர்ஜின் குமார், பூவையார், டாலி ஆகியோர் புதிய கோமாளிகளாக இணைந்துள்ளனர். 

cooku with comali season 6 contestants list
  • cooku with comali season 6 contestants list குக் வித் கோமாளியில் சிறகடிக்க ஆசை நடிகரா? இணையத்தில் லீக் ஆன போட்டியாளர்களின் பட்டியல்!
  • Continue Reading

    Read Entire Article