ARTICLE AD BOX

சென்னையில் குடிபோதைக்கு அடிமையாகி தொல்லை செய்து வந்த மகனை தந்தையும், சகோதரனும் சேர்ந்து கொலை செய்து எரித்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மதுரவாயல் வாநகரம் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசைமணி. இவருக்கு வயது 60. இவருக்கு அஜய் மற்றும் விஜய் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் விஜய்க்கு 7 ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் நடந்து ஒரே மாதத்தில் மனைவியையும் பிரிந்துள்ளார். இதனால் தனது தந்தை மற்றும் சகோதரனுடன் வீட்டில் வசித்து வரும் விஜய் கஞ்சா மற்றும் மது போதைக்கு தீவிரமாக அடிமையாக உள்ளார். இதனால் தினமும் வீட்டில் பிரச்சனை செய்து வந்தார் என்று கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த தினத்தன்று விஜய் கடுமையான மதுபோதையில் வீட்டுக்கு வந்து தன் தந்தையுடனும், சகோதரனுடனும் சண்டை போட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ஆசைமணி மற்றும் விஜயின் சகோதரர் இணைந்து கத்தியால் குத்தி கொலை செய்து பின் அவரின் உடலை வீட்டிற்கு பின்னால் உள்ள இடத்தில் எரித்துள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விஜயின் தந்தை மற்றும் சகோதரனை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The station “குடிகாரனான மகன்- குத்திக்கொன்ற தகப்பனும், சகோதரனும்!”-சென்னையில் பயங்கரம்! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.