ARTICLE AD BOX
அசிங்கப்பட்ட ஆறடி நடிகர்
தமிழ் சினிமாவில் தன்னுடைய கட்டான உடலால் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகர் பக்கத்து தேசத்தில் இருந்து வந்தாலும்,அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.
மின்னல் வேகத்தில் உயர்ந்த இந்த ஆறடி நடிகரின் மார்க்கெட் திடிரென்று மங்க தொடங்கியது,அதற்கு அவருடைய பழக்கவழக்கங்களே காரணம் என்று சொல்லப்பட்டது.
ஆரம்பத்தில் வாரிசு நடிகரின் மகளை உருகி உருகி காதலித்த அந்த ஆறடி நடிகருக்கு அது தோல்வியே கொடுத்தது,அதன் பிறகு முரட்டு சிங்கிள் ஆக வலம் வந்த இவர் ஓவர் குடிக்கு அடிமையானார்,இந்த நிலையில் தன்னுடைய சினிமா கரியரில் கம் பேக் கொடுக்க தொடர்ந்து நடித்து வந்தார்,அப்போது அவர் கூட நடித்த தேசிய நடிகை மீது இவருக்கு ஒரு கண்ணு,அந்த கண்ணு காதலாக மாறாக ஒரு நபர் மூலம் அந்த நடிகையின் வீட்டிற்கு தூது அனுப்பியுள்ளார்.
அந்த நடிகையின் அப்பா பிரபல நடிகர் என்பதால் இவர் பொண்ணு கேட்ட செய்தி அவர்களை ஆத்திரத்தை தூண்டியது,நடிகையின் அம்மா அந்த ஆளே ஒரு குடிகாரன்,பல பெண்களை ஏமாற்றி இருக்கிறான்,அவனுக்கு ஏன் பொண்ணு கேட்குதா என்று கோபத்துடன் தூது சொல்ல வந்த நபரை துரத்தி விட்டார்கள் அந்த நடிகையின் அம்மா,அதன் பிறகு தற்போது வரை ஆறடி நடிகருக்கு இன்னும் கல்யாணம் ஆகாமல் திணறி வருகிறார்.