ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மோஸ்ட் வாண்டட் நடிகையாக மாறியவர் கீர்த்தி சுரேஷ். குடும்ப பாங்கான கேரக்டர்களில் நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்தார், இதில் தெலுங்கில் வெளியான மகாநதி படம் பெரிய ஹிட் கெடுத்தது மட்டுமல்லாமல், கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது தேடி வந்தது.
இதையும் படியுங்க : பேரதிர்ச்சி.!தெலுங்கு நடிகர்கள் மீது புகார்..பரபரப்பில் திரையுலகம்.!
பின்னர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்த அவருக்கு, பாலிவுட்டில் வாய்ப்பு வந்தது. விஜய் நடித்த தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்த அந்த படம் படுதோல்வி அடைந்தது.
அதுவரை குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்த கீர்த்தி, பாலிவுட்டில் கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டினார். ஆனால் திடீரென தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி உடையில் போட்டோஷீட் எடுத்த கீர்த்தி தொடர்ந்து கிளாமராகவே வலம் வருகிறார்.

இந்த நிலையில் பாலிவுட்டில் அவருக்கு அடுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்த கீர்த்தி தற்போது காமெடி கலந்த ரொமாண்டிக் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். கீர்த்திக்கு பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காது என நினைத்த நிலையில் ஜாக்பாட் அடித்துள்ளது.
