ARTICLE AD BOX
ரசிகர்களுக்கான திரைப்படம்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் “குட் பேட் அக்லி”. இத்திரைப்படம் அஜித் ரசிகர்களின் மத்தியில் கொண்டாடப்பட்டது. எனினும் வெகுஜன ரசிகர்கள், இத்திரைப்படம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போல் உள்ளதாக விமர்சனம் செய்தனர். எனினும் அஜித் ரசிகர்கள் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், “இது அஜித் ரசிகர்களான எங்களுக்காகவே எடுக்கப்பட்ட திரைப்படம்” என கூறினார்கள்.

இவ்வாறு கலவையான வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் உலகளவில் ரூ.240 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்தது. “விடாமுயற்சி” திரைப்படத்தை ஒப்பிடும்போது இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றிதான் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்.
குட் பேட் அக்லியால் நஷ்டம்…

“குட் பேட் அக்லியை பொறுத்தவரை அத்திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்டம்தான் என திரையுலகில் பேசிக்கொள்கிறார்கள். தயாரிப்பாளருக்கு நஷ்டமா இல்லையா என்பது அத்தயாரிப்பாளர் வெளிப்படையாக கூறினால்தான் உண்மை தெரிய வருமே தவிர நமக்கெல்லாம் கணக்கு தெரியாது. ஆனால் விடாமுயற்சியை பொறுத்தவரை நிச்சயமாக தெரியும் அது கண்டிப்பாக தயாரிப்பாளருக்கு நஷ்டம்தான் என்று” என அப்பேட்டியில் பேசியுள்ளார்.
