ARTICLE AD BOX
அஜித்தின் “ரெட் டிராகன்” கதாபாத்திரம் – மாஸ் அப்டேட்!
அஜித் குமார் நடிப்பில் உருவாகும் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி முடித்துள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்ய,ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதையும் படியுங்க: பேரதிர்ச்சி.!தெலுங்கு நடிகர்கள் மீது புகார்..பரபரப்பில் திரையுலகம்.!
துவக்கத்தில் 2025 பொங்கலுக்கு இப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், “விடாமுயற்சி” திரைப்படம் தாமதமானதால்,”குட் பேட் அக்லி” ஏப்ரல் 10, 2025 அன்று திரைக்கு வரவுள்ளது.
இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ள நிலையில், வெளியான படத்தின் டீசரும்,”OG சம்பவம்” பாடலும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்திய பேட்டியில்,”குட் பேட் அக்லி” படத்தின் தலைப்பை அஜித் சார் தான் தேர்வு செய்தார்.இதில் அவர் நடிக்கும் “ரெட் டிராகன்” கதாபாத்திரத்தின் பெயர் மிக மாஸாக இருக்கும்.
இப்படத்தில் மிகுந்த உணர்வுபூர்வமான காட்சிகள் அடங்கியுள்ளன,ஏப்ரலில் அஜித் ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய விருந்தாக இருக்கும்.ஒவ்வொரு காட்சியிலும் அஜித் சார் எப்படித் தோன்றுவார் என்பதில் எங்கள் குழுவினர் மிகுந்த ஆர்வத்துடன் கடினமான உழைப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.இதை ரசிகர்கள் திரையில் கண்டுகளிக்க தயாராகுங்கள் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அஜித்தின் மாஸ்,ஆக்சன் மற்றும் உணர்வு கலந்த இந்த திரைப்படம்,ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் திருவிழாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9 months ago
122









English (US) ·