ARTICLE AD BOX
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும் வெளியாகவுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் தனுஷ் பிச்சைக்காரர் வேடத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய படக்குழுவினர், இத்திரைப்படம் தற்கால சமூக பிரச்சனைகளை குறித்து பேசியுள்ளது எனவும் கூறினார்கள். இந்த நிலையில் இத்திரைப்படத்திற்கு சென்சாரில் 19 இடங்களில் வெட்டு விழுந்துள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
 இத்திரைப்படம் முதலில் 195 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருந்தது. ஆனால் அதன் பின் தற்போது 181 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தில் 19 இடங்களில் சென்சார் போர்டு கட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் சமூக அமைப்பு குறித்து கேள்வி எழுப்பும் வகையில் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் எப்படிப்பட்ட சர்ச்சையான காட்சிகள் இத்திரைப்படத்தில் இருக்கின்றன என்பது குறித்து தகவல் தெரியவில்லை.
 
                        4 months ago
                                50
                    








                        English (US)  ·