ARTICLE AD BOX
அண்மையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் குபேரா. 3 மணி நேரம் ஓடக்கூடிய குபேரா திரைப்படம் தெலுங்கில் மாஸ் காட்டி வசூலை வாரி குவித்தது.
ஆனால் தமிழ்நாட்டில் குபேரா படம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு என்ன காரணம் என தெலுங்கு விநியோகிஸ்தர்கள் காரணங்களை தேடி வருகின்றனர்.
இதையும் படியுங்க: சென்னையில் பிரபல நடிகரின் வீட்டுக்குள் கொக்கைன்? துபாயில் தலைமறைவு? பிரபலம் ஓபன்!!
இதனிடையே தெலுங்கு ஊடகங்கள், குபேரா படம் தமிழ்நாட்டில் ஓடாததற்கு காரணம், தனுஷ் அண்மையில் பிரபல நடிகையுடனான மோதல் தான் என்றும், அவரின் படத்தின் சின்ன கிளிப்பை சேர்த்தற்காக பல கோடி நஷ்ட ஈடு கேட்டதும் தான் என கூறுகின்றனர்,

இது தவிர சூப்பர் ஸ்டார் மகளை விவாகரத்து செய்ததும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. அதனால் தனுஷ் படத்தை யாரும் தியேட்டருக்கு சென்று பார்ப்பதில்லை. அவர் மீது ரசிகர்களுக்கு வெறுப்புதான் ஏற்பட்டுள்ளது என கூறுகின்றனர்.

ஏன் ராயன் படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி மட்டுமே வசூல் செய்தது. சமீபத்தில் அவர் இயக்கிய நிலவுக்கு என் மீது என்னடி கோபம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது என தெலுங்கு ஊடகங்கள், ரசிகர்கள் பேசிக்கெள்கின்றனர்.
