குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

1 week ago 17
ARTICLE AD BOX

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா.

நேற்று இந்த படம் உலகம் முழுவதும் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியான குபேரா திரைப்படத்தில் ராஷ்மிகா, நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

படம் 3 மணி நேரம் நீளமாக இருப்பதாகவும், பழைய கதை என்பதால் சுலபமாக கணிக்க கூடிய காட்சிகள், ஒற்றை ஆளாய் படத்தை தூக்கி நிறுத்துவது தனுஷ் என விமர்சனங்கள் எழுந்தன.

இதையும் படியுங்க: நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

நாகர்ஜூனா, ராஷ்மிகா நடிப்பு ஓவர் ஆக்டிங் என கூறப்படுகிறது. கருப்பு பணத்தை வெள்ளையாக்க பிச்சைக்காரரை பணக்காரராக மாற்றும் கதை என்ற பழைய ஸ்டைலையே பூசி புதியதாக காட்சிப்படுத்தியுள்ளனர். ராஷ்மிகா உடனான சந்திப்புக்கு பின் கதை களமே மாறுகிறது.

டிஎஸ்பியின் பாடல் கைக்கொடுக்கவில்லை என்றாலும், பின்னணி இசையில் தூக்கி நிறுத்தியுள்ளார். ஆனால் 3 மணி நேரம் படம் நீளமாக இருப்பதுதான் மிகப்பெரிய மைனஸ் என நேற்று படம் குறித்து நிறைய விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் குபேரா படத்தின் விமர்சனத்தை கேட்டு சில நடிகர்கள் நடிகை மகிழ்ச்சியில் உள்ளதாக பிரபல சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X தளப் பதிவில், குபேரா படத்தின் ரிப்போர்ட்டை கேட்டு…‌Nose piercing நாயகியும், Opposite Swimming மற்றும் Burned out forest நாயகர்களும் குஷியாக உள்ளனராம். – காயாங்குளம் கொச்சுண்ணி
பழைய பத்திரிக்கையாளர் என பதிவிட்டுள்ளார்.

அதாவது மூக்குத்தி அம்மன் நயன்தாரா, எதிர்நீச்சல் எஸ்கே, வெந்து தணிந்தது காடு நாயகன் சிம்பு குஷியில் உள்ளதாக கருத்து கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Kubera Moive Fails... A famous actress in extreme happiness குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!
  • Continue Reading

    Read Entire Article