ARTICLE AD BOX
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பள்ளிக்கு சென்று விட்டு திரும்பயி 8 வயது சிறுமியை, பின்தொடர்ந்து வந்த மர்மநபர் வாயை பொத்தி மாந்தோப்புக்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தான்.
இந்த சம்பவம் தமிழகத்தில் உலுக்கி உள்ள நிலையில், குற்றவாளியை கைது செய்யாத ஆரம்பாக்கம் காவல்துறையை கண்டித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தேசிய மகளிர் நல ஆணையத்திற்கு அதிமுக கடிதம் எழுதியுள்ளது. அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
சிறுமிக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், 2022 – 2025 வரை நடந்த வன்கொடுமைகள் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
