குழந்தைகளை ஏலம் விட்ட பெற்றோர் : நேர்த்திக்கடனுக்காக நடந்த வினோத திருவிழா!

2 months ago 34
ARTICLE AD BOX

திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் உள்ள முத்தழகுப்பட்டியில் 350 வருடங்கள் பழமையான புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் 4நாள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த வருடம் கடந்த 03ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னதானம் நிகழ்ச்சியில் இன்று இரவு நடைபெறுகிறது. நாளை பகல் சப்பறத்துடன் திருவிழா நிறைவடைகிறது. இன்று (05.08.25) காலை முதல் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் இஸ்லாமியர்கள் என மும்மதத்தை சார்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் தேவாலயத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இன்று புனித செபஸ்தியார் ஆலயத்தில் வேண்டுதல் வைக்கும் பக்தர்கள், தங்களது வேண்டுதலை செபஸ்தியார் நிவர்த்தி செய்து கொடுத்தமைக்காக அவருக்கு நன்றி செலுத்தி வருகின்றனர்.

மேலும் திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கக்கூடிய தம்பதியினர் செபஸ்தியாரிடம் வேண்டுதல் வைத்து குழந்தை பெற்றவுடன் குழந்தையை கோவிலுக்கு கொண்டு வந்து கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்து.

திண்டுக்கல்லில் வேண்டுதலை நிறைவேற்ற குழந்தைகளை ஏலம் விடும் வினோத திருவிழா ரூ 5,000க்கு ஏலம் போன பெண்குழந்தை…புனித செபஸ்தியார் ஆலயத்தில் சாதி மத பேதமின்றி வந்த மக்கள் குழந்தைகளை ஏலம் விட்டு அவர்களே எடுத்து சென்றனர்#Trending | #Dindigul | #festival | #viralvideo | #updatenews360 pic.twitter.com/uZi8iSKXFo

— UpdateNews360Tamil (@updatenewstamil) August 5, 2025

அதன் பின் கோவில் வளாகத்தில் ஏலம் விட்டு அவர்களே எடுத்துச் சொல்கின்றனர். குழந்தைகளை ஏலம் விட்டு அவர்களை எடுத்துச் செல்லும் வினோத திருவிழா இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

  • Soori kummiyattam in his native village video going viral இது எங்க ஊர் திருவிழா- பெண்களின் மத்தியில் கும்மியடித்த சூரி! வைரல் வீடியோ…
  • Continue Reading

    Read Entire Article