குழந்தைகளை பார்க்கவே பயமாக உள்ளது…நடிகர் மாதவன் வேதனை.!

1 week ago 12
ARTICLE AD BOX

நடிகர் மாதவனின் புதிய செயலி

நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போது அவர் இப்போ இருக்கின்ற குழந்தைகளை பற்றி பல கருத்துகளை முன்வைத்தார்,அதாவது இந்தச் செயலி பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் சமூக ஊடகங்களில் செலவழிக்கும் நேரத்தை கண்காணிக்க உதவுகிறது.இன்று குழந்தைகள் பெற்றோரை விட சமூக ஊடகங்களிலிருந்து அதிகம் கற்றுக்கொள்கிறார்கள்.இதனால் அவர்கள் பேசும் விதம், பழக்கவழக்கங்கள், மனநிலை எல்லாம் மாற்றம் அடைந்துவிட்டது.

Parenting and child safety online

குழந்தைகள் ஒரே அறையில் இருந்தாலும் ஒவ்வொருவரும் தனித்தனியாக இருக்கிறார்கள், ஹெட்செட் அணிந்து வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் வீடியோ கேம்களில் போட்டியிடுகிறார்கள் என்று கூறினார். சமூக ஊடகங்கள் குழந்தைகளின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளதாகவும், இன்று மூன்று முக்கிய விஷயங்களை பேச வேண்டும்,குழந்தைகள் திரை பார்க்கும் நேரம், சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் உடல்நலத்திற்கான விளைவுகள் எனவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்க: ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தங்க மோதிரம்…சென்னைக்கு படையெடுத்த மதுரை ரசிகர்கள்.!

கடந்த காலங்களில் ‘Blue Whale’ போன்ற ஆபத்தான விளையாட்டுகள் குழந்தைகளின் மனதை பாதித்ததினால், பலர் தற்கொலைக்குச் சென்றார்கள். இப்படி ஒரு சூழல் மீண்டும் வராமல் இருக்க, பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். இன்று குழந்தைகள் சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டும், அதிக லைக்குகள், டிஸ்லைக்குகள் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்க்கையை நடத்துகிறார்கள். இது அவர்களை தனிமைப்படுத்தி மனச்சோர்விற்கு தள்ளுகிறது.

இந்தச் செயலியின் மூலம் குழந்தைகள் எந்தளவிற்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க முடியும். அவர்கள் பயன்படுத்தும் பயன்பாடுகளை கட்டுப்படுத்த முடியும். சில குழந்தைகள் சமூக ஊடகங்களில் அதிகம் ஈடுபடும் பழக்கம் காரணமாக மாற்றம் அடைந்துவிடுகின்றனர். அவர்களை வழிநடத்த இது பெற்றோருக்கு உதவியாக இருக்கும்.

இந்த செயலி இலவசமாகவும், மாதம் 300 அல்லது வருடத்திற்கு 3,000 கட்டணத்தில் கிடைக்கிறது.பெற்றோர்கள் இதைப் பயன்படுத்தி குழந்தைகளை பாதுகாக்க முடியும். சிறந்த எதிர்காலத்திற்காக குழந்தைகளை வழிநடத்தும் மிகச்சிறந்த முறையாக இது இருக்கும் என்று மாதவன் நம்பிக்கை தெரிவித்தார்.

  • Madhavan on social media impact குழந்தைகளை பார்க்கவே பயமாக உள்ளது…நடிகர் மாதவன் வேதனை.!
  • Continue Reading

    Read Entire Article