ARTICLE AD BOX
திருச்சியில் இருந்து இன்று த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தொடங்கினார். டிசம்பர் மாதம் வரை, ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், குறிப்பிட்ட இடைவெளியில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.
இதற்காக, சென்னை விமான நிலையத்தில் இருந்து தனியார் விமானம் மூலம் திருச்சிக்கு வந்த விஜயை, தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம், மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே அவர் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
விஜய் வருகை புரியும் வழியெங்கும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பிரசார வாகனம் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதேபோல், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் விஜய் பேசுவதில் சிக்கலும் எழுந்தது.
எனினும், மக்கள் கூட்டத்தைக் கண்டு கையசைத்தபடி, உற்சாகத்துடன் விஜய் முன்னேறினார். திருச்சி மரக்கடை பகுதியில் இன்று காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை அவருக்கு உரையாற்ற போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.இதனால் விஜய் குறிப்பிட்ட நேரத்தில் பேச முடியாமல் தாமதாமாகியுள்ளதால், அவர் பேசும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 month ago
40









English (US) ·