ARTICLE AD BOX
இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருவது கூமாப்பட்டி தான். darknighttn84 என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து ஒருவர் வெளியிட்ட வீடியோ காட்டுத்தீ போல பரவி வருகிறது.
அந்த வீடியோவில், உங்களுக்கு மன அழுத்தமா? விடுமுறையை கொண்டாட வேண்டுமா?அப்படினா கூமாப்பட்டிக்கு வாங்க.. கூமாப்பட்டி தனித் தீவு, இந்த ஊரு தண்ணீர் மூலிகை தண்ணீர் என அந்த ஊர் மக்களின் மொழிநடையில் பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது.
இவர் சொல்வது உண்மையான என பலரும் கூகுள் மேப்பை தட்டி தேடி வருகின்றனர். பின்னர்தான் கூமாப்பட்டியில் மழைவந்தால் மட்டும்தான் தண்ணீர் குளம் போல தேங்கியிருக்கும் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் விருதுநகர் ஆட்சியராக உள்ள ஜெயசீலன், விருதுநகரில் இருந்து வேறு மாவட்டத்திற்கு ஆட்சியராக பணி மாற்றத்துக்கு செல்ல உள்ளார். நேற்றைய முன்தினம் அவர் கடந்த இரண்டரை வருடமாக பணியாற்றியது குறித்து தனது அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அதே சமயம் கூமாப்பட்டி குறித்து அவர் போட்ட பதிவு தான் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், உலக புகழ் பெற்ற வமாபட்டியில் இருந்து, நேற்றில் இருந்து என் நண்பர்கள் என்னை அழைத்து என்னடா விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்து கொண்டு இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாப்பட்டியை காட்டாமல் விட்டு விட்டாய் என கோபித்து கெண்டனர்.
எனக்கே அதிர்ச்சியான்தான் இருக்கு பொறுங்க நாளைக்கு சும்மா தான் இருப்பேன், போய் பார்த்து போட்டோ அனுப்புகிறேன் என கூறினேன்.
ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு மேற்கே அமைந்துள்ள மலை அடிவாரத்தில் உள்ள ஊர்தான் இந்த கூமாப்பட்டி, பிளவக்கல் கோவிலாறு அணைகளுக்கு அருகே, இரண்டு கண்மாயகளை கொண்ட ஆயக்கட்டுகள் நிறைந்த ஊர்.
மழைக்காலத்தில் கம்மாய்கள் நிரம்பி கடல் போல தெரியும், இயற்கை எழில் சூழ ரம்மியமாய் காட்சியளிக்கும். அதே சமயம் வைரல் வீடியேவில், தலைவன் சொன்னதை போல காதல் தோல்விக்கு தீர்ர்தம், காதல் செட்டாக தைலமாக இருக்குமா என்பது குறித்து எந்த ஆவணக்குறிப்பும் இல்லை. தலைவர் சொன்னது எல்லாம் ‘ரீல்’ஸ் மட்டுமே.
ஆனால் கிராம சுற்றுலாவை மேம்படுத்த, நகர்ப்பற வாழ்வியலில் இருந்து இளைப்பாற 100 சதவீதம் இது அருமையான இடம். ஒருவேளை எதிர்காலத்தில் இது கிராம சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையாலம் என எதிர்பார்க்கலாம். கூமாப்பட்டியின் இன்றைய புகைப்படங்களும் கடைசி படம் கடந்த ஆண்டு நீர் நிரம்பிய போது நான் எடுத்தது என பதிவிட்டுள்ளார்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றைய வெளியிட்டுள்ளனர். அதில், கூமாபட்டியில் உள்ள பிளவக்கல் அணைப் பகுதியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு நீந்துதல், மீன் பிடித்தல் அல்லது பிற நீர் சார்ந்த செயல்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பரவி வரும் வீடியோக்கள், பிளவக்கல் அணையில் தெளிவான நீர் மற்றும் பசுமையான சூழல் இருப்பதாகக் காட்டினாலும், உள்ளூர் மக்கள் இவை பழைய வீடியோக்கள் என்றும், தற்போது அணையில் நீர் வறண்டு காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.
இதனால், சுற்றுலாப் பயணிகள் இந்த வீடியோக்களை நம்பி கூமாபட்டிக்கு வந்து ஏமாற வேண்டாம் என்று பொதுப்பணித்துறை எச்சரித்துள்ளது. கூமாபட்டி, வத்திராயிருப்புவில் இருந்து 5 கி.மீ. தொலைவில், விருதுநகரில் இருந்து சுமார் 48-60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.