‘கூலி’ அடிபோலி…1000 கோடி உறுதி…சவால் விட்ட இளம் நடிகர்.!

1 week ago 14
ARTICLE AD BOX

அடித்து சொல்லும் சந்தீப் கிஷன்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக உள்ளது .லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றார்.

இதையும் படியுங்க: குழந்தைகளை பார்க்கவே பயமாக உள்ளது…நடிகர் மாதவன் வேதனை.!

சமீபத்தில் நடிகர் சுந்தீப் கிஷன் இப்படத்தில் நடிக்க உள்ளார் என வதந்திகள் பரவி வந்தன. ஆனால்,அவர் தற்போது இப்படத்தில் இல்லை என்பதையும்,அதே சமயம் படத்தைப் பற்றிய மகிழ்ச்சியான செய்தியையும் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Sundeep Kishan on Coolie

சுந்தீப் கிஷன் ‘Idle Brain’ என்ற ஒரு சேனலுக்கு கொடுத்த பேட்டியில், படத்தி நான் நடிக்க வில்லை.ஆனால், என் நெருங்கிய நண்பர் லோகேஷ் கனகராஜை பார்க்கவும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆளுமையை நேரில் காணவும் படப்பிடிப்பு இடத்திற்கு சென்றேன்.அப்போது படத்தின் 45 நிமிடங்களைப் பார்த்தேன். இப்படம் வசூலில் ₹1000 கோடி வசூலை கண்டிப்பாக அடையும் ” என்று கூறியுள்ளார்.

கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து, சத்யராஜ், நாகார்ஜுனா, பூஜா ஹெக்டே, மற்றும் ஷ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.மேலும், பாலிவுட் நடிகர் ஆமிர் கான் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இப்படம் 2025 ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

— Movie Tamil (@MovieTamil4) February 27, 2025

லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் கூட்டணியில் இப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான ஒரு சாதனையாக மாறும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

  • Coolie box office predictions ‘கூலி’ அடிபோலி…1000 கோடி உறுதி…சவால் விட்ட இளம் நடிகர்.!
  • Continue Reading

    Read Entire Article