ARTICLE AD BOX
எகிறும் எதிர்பார்ப்பு
அரங்கம் அதிர ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது “கூலி” திரைப்படம். ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு உள்ளது. இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரெயிலர் கடந்த வாரம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) வெளியானது. இத்திரைப்படத்தின் டிரெயிலரை டீகோட் செய்து வரும் ரசிகர்கள் இத்திரைப்படம் ஒரு டைம் டிராவல் திரைப்படம் என்று யூகித்து வருகின்றனர்.
“கூலி” திரைப்படம் உருவாவதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து ஒரு ஃபேண்டசி திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. அதில் ரஜினிகாந்த் வில்லனாகவும் மற்ற நடிகர்கள் ஹீரோவாகவும் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

கூலி ஃபேண்டசி திரைப்படமா?
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ், “கூலி” திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அப்போது அவர், “கூலி திரைப்படம் ஃபேண்டசி கதை இல்லை. இது வேறு கதை. முதலில் நான் ரஜினிக்காக எழுதிய கதைதான் ஃபேண்டசி கதை. அதில் ஹீரோதான் வில்லனே. நான் வேறு ஒருவரை ஹீரோவாக தேடிக்கொண்டிருந்தேன். ரஜினிகாந்தும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

ஆனால் அந்த கதையை நான்தான் வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஏனென்றால் அந்த கதையை படமாக்க அதிக காலம் தேவைப்படும் என்பதாலும் நிறைய நடிகர்கள் அதில் நடிக்க வேண்டியதாக இருந்த காரணத்தினாலும் அந்த கதையை நான் வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
