கூலி டிக்கெட் எடுக்க முந்தியடித்துக்கொண்டு திடுதிடுவென ஓடிய ரசிகர்கள்! வைரல் வீடியோ…

1 month ago 7
ARTICLE AD BOX

தொடங்கியது கூலி ஃபீவர்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு பன்மடங்கு எகிறியுள்ளது. வெளிநாடுகளில் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில் அனைத்து டிக்கெட்டுகளும் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. அதுமட்டுமல்லாது இன்று இரவு தமிழ்நாட்டில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட உள்ளதால் ரசிகர்கள் வெறித்தனமாக டிக்கெட் முன்பதிவு செய்ய காத்துக்கொண்டிருக்கின்றனர். 

Kerala Fans run and rushed to buy coolie tickets

முந்தியடித்துக்கொண்டு ஓடிய ரசிகர்கள்!

இந்த நிலையில் கேரளாவில் ஒரு திரையரங்கில் “கூலி” திரைப்படத்தின் முன்பதிவு டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில் டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் பலரும் முந்தியடித்துக்கொண்டு ஓடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

திரையரங்கின் கேட் திறக்கப்பட்டவுடனே திடுதிடுவென டிக்கெட் கவுன்ட்டரை நோக்கி கூட்டம் ஓடி வருகிறது. இவ்வாறு திரையரங்கத்தையே அதிரச்செய்துள்ளனர் ரசிகர்கள். அந்த வீடியோ இதோ…

Craze aming Fans for #Coolie Offline tickets bookings in Kerala🥶pic.twitter.com/kAa88Mrjvr

— AmuthaBharathi (@CinemaWithAB) August 8, 2025

கேரளாவில் சில மணி நேரங்களுக்கு முன் “கூலி” திரைப்படத்தின் வரையறுக்கப்பட்ட முன்பதிவு (Limited Booking) தொடங்கப்பட்ட நிலையில் 30 முதல் 40 நிமிடங்களில் 40,000 டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியாகியுள்ளது. 

  • Kerala Fans run and rushed to buy coolie ticketsகூலி டிக்கெட் எடுக்க முந்தியடித்துக்கொண்டு திடுதிடுவென ஓடிய ரசிகர்கள்! வைரல் வீடியோ…
  • Continue Reading

    Read Entire Article